சுடச்சுட

  

  "நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ. 1.23 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்'

  By DIN  |   Published on : 30th June 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ. 1.23 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். சங்கர்  தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் தெரிவித்தது : நீடாமங்கலம் பேரூராட்சி வடக்கு வீதி, சர்வமான்ய அக்ரஹாரம்,  கீழராஜவீதி, பழைய நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துக் காணப்பட்டது.
  இந்த நிலையைப் போக்கிட தார்ச் சாலையைப் புதுப்பித்து அமைத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  இதன்பேரில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு சாலைகளை மேம்படுத்திட வடக்குவீதி, சர்வமான்ய அக்ரஹாரம், கீழராஜவீதி ஆகிய தெருக்களில் ஏற்கெனவே இருந்த சாலையை விட இருவழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்திட தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி 2017-2018 -இன்படி ரூ. 75 லட்சத்தை ஒதுக்கீடு 
  செய்தது.
  அதன்படி, இந்த சாலைகள் 8 மீட்டர் அகலத்தில் 570 மீட்டர் நீளத்தில் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
  மேலும், பழையநீடாமங்கலம் பகுதியில் பழையநீடாமங்கலம் புதுத்தெரு முதல் பத்ரகாளியம்மன் கோயில் வரை மற்றும் அக்ரஹாரம் தெரு ஆகிய தெருச் சாலைகளை மேம்படுத்தி தார்ச் சாலை அமைத்திட 14 -ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலைகள் 4 மீட்டர் அகலத்தில் 1,200 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகின்றன என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai