சுடச்சுட

    

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூத்தாநல்லூர் வாசிப்பு இயக்கம் சார்பில், மன்னார்குடியை அடுத்த புத்தகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பள்ளி வளாகத்தில் உள்ள கல்பனா சாவ்லா அறிவியல் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் மா. மாலதி தலைமை வகித்தார்.
    விழாவில், புத்தக வாசிப்பு இயக்கத்தையும், எளிய அறிவியல் பரிசோதனை செயல்விளக்க நிகழ்ச்சியையும் அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் தை. புகழேந்தி தொடங்கி வைத்தார்.
    இதில், 10, 11, 12 -ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையா நினைவு அறக்கட்டளை மற்றும் முன்னாள் எம்பி எஸ்.ஜி. முருகையன் நினைவு கல்வி அறக்கட்டனை சார்பில் பாராட்டப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
    விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ. கோவிந்தராஜன், திருமக்கோட்டை அரசுப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் கலைச்செல்வன், கூத்தாநல்லூர் நூலகர் த. செல்வகுமார், அறிவியல் இயக்க மாநிலச் செயலர் ஸ்டீபன்நாதன், மாவட்டச் செயலர் யு.எஸ். பொன்முடி, கும்மட்டித்திடல் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai