Enable Javscript for better performance
வளவனாறு மேம்படுத்தும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சிங்களாந்தி கிராமத்தில் ரூ. 44 . 62 கோடியில் வளவனாறு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை வெள்ளிக்கிழமை ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். 
    ஆய்வுக் குறித்து ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறியது: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட வளவனாற்றில் ரூ. 44.62 கோடி மதிப்பில் கரைகள், வடிகால் மதகுகள் புனரமைத்தல், கடைமடை அணைகள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
    அதன்படி, 19.300 கிலோமீட்டர் அளவுக்கு கரைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 1 கடைமடை அணை அமைக்கும் பணி, 1 பிச்சன்கோட்டகம் வடிகால் கடைமடை அணை அமைக்கும் பணி, 20 வடிகால் மதகு அமைக்கும் பணிகள், 8 மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. 
    மேலும், திருத்துறைப்பூண்டி முதல் துளசியாப்பட்டினம் வரை 14.300 கிலோ மீட்டர் அளவுக்கு கரையோர தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள் என்றார் நிர்மல்ராஜ். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai