சுடச்சுட

    

    பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நீடாமங்கலம் பொதுப் பணித்துறை கோட்ட அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் வி. பூசாந்திரம், வலங்கைமான் ஒன்றியச் செயலர் கே. சுப்பிரமணியன், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் டி. சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில், வலங்கைமான், நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் நீடாமங்கலம் சோம. ராஜமாணிக்கம், வலங்கைமான் ராதா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. கைலாசம், பி. கந்தசாமி, நகரச் செயலாளர் சி.டி. ஜோசப், சிஐடியு கே. முனியாண்டி, மாதர் சங்க ஒன்றியச் செயலர் ஆர். சுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai