சுடச்சுட

    

    திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 
    திருவாரூர் மாவட்டம், கீழப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர், வேலங்குடியில் உள்ள தனது மகள் பிரமிளா ராணி வீட்டுக்கு சென்று விட்டு, வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பானுமதி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai