Enable Javscript for better performance
அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்: மார்ச் 27 -இல் நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்: மார்ச் 27 -இல் நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 24th March 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 27 -இல் நடைபெறுகிறது.
    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் விளையாட்டுப் பிரிவு சார்பில், அரசுப் பணியாளர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், மார்ச் 27 -இல் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
    ஆண்களுக்கான தடகளப் போட்டிகளில் 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ. ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், குழு விளையாட்டுப் போட்டிகளில் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கால்பந்து, கபடி, மேசைப் பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
    பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ. ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், குழு விளையாட்டுப் போட்டிகளில் இறகுப் பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேசைப்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
    மாவட்டப் போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்டப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள சீருடை வழங்கி அழைத்துச் செல்லப்படுவர். அனைத்து போட்டிகளும் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அவர்கள் பணிபுரியும் துறையின் அடையாள அட்டையை எடுத்து வருதல் வேண்டும்.
    மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள சிறப்பு தற்செயல் விடுப்பு, பயணப்படி மற்றும் தினப்படியை அந்தந்தத் துறை அலுவலர்களிடம் பெற்று போட்டியில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366- 227158 -இல் தொடர்பு கொள்ளலாம்.
    போலீஸார், சீருடைப் பணியாளர்கள், பகுதிநேரப் பணியாளர்கள், சில்லறை பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் நீங்கலாக திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்களும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai