Enable Javscript for better performance
காவல் துறையினருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை பகுதியில் சட்ட ஒழுங்கை சிறப்பாக பராமரித்த காவல் துறையினரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் புதன்கிழமை சான்றிதழ் வழங்கினார்.
    முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர் கணபதி ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது சிறந்த முறையில் நடவடிக்கை மேற்கொண்டு பல லாரிகளை பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்தனர். தவிர கந்துவட்டி, கள்ளத்தனமாக மதுவிற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து சட்ட ஒழுங்கை பாதுகாத்தனர். காவல் துறையினரின் இச்செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் சான்றிதழ் வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai