Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்: ஏப்.5-இல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: ஏப்.5-இல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்காவிடில், டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி அனைத்து அரசு கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
    திருவாரூரில் மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன், செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி, 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே உரிய காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்.
    மத்திய அரசானது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால், மராட்டியத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் போல, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
    இது தவிர காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி ஏப். 5-ஆம் தேதி திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 6 டெல்டா மாவட்டங்களில், வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai