Enable Javscript for better performance
குடும்ப வாரியாக ஆய்வு: ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப வாரியாக ஆய்வு: ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 24th March 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப வாரியாக ஆய்வுகளுக்கு வரும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பங்களைப் பற்றிய தொடர்ச்சியான ஆய்வு, மார்ச் 6 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளான வாழ்க்கை நிலை, வருவாய், பணி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் இடப்பெயர்ச்சி பற்றிய விவரங்களை சேகரிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வீதம் 8 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.
    இந்த ஆய்வுக்காக புள்ளியியல் துறையைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களை அணுகும்போது, சரியான தகவல்களை அளித்து அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    மேலும், பொதுமக்கள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே நாட்டின் எதிர்கால திட்டமிடல் செய்யப்படுவதால், இந்த ஆய்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி சரியான தகவல்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai