Enable Javscript for better performance
திருச்சி விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில், திருச்சி விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டுமென்றக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்நாடு முத்தரையர் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முத்தரையர் சமுதாயத்துக்கு 20 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், திருச்சியில் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், திருச்சி விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும், பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், முத்தரையர் சமூகத்துக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
    மாநில முத்தரையர் சமூக தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், திரைப்பட நடிகர் ஆர்.வி. பரதன், இந்திய தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கே. அருணாச்சலம், சிங்க முத்தரையர் முன்னேற்ற கழக மாநிலத் தலைவர் ராஜீவ்காந்தி, முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க நிர்வாகி எஸ்.எம். மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai