Enable Javscript for better performance
பள்ளி பரிமாற்றத் திட்ட நிறைவு விழாபள்ளி பரிமாற்றத் திட்ட நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி பரிமாற்றத் திட்ட நிறைவு விழாபள்ளி பரிமாற்றத் திட்ட நிறைவு விழா

    By DIN  |   Published on : 24th March 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ. சூசை ரெத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து 5 நாள்கள் கற்றுக்கொண்ட புதிய செய்திகள், அறிவியல் உண்மைகள், செயல் திட்டங்கள் போன்றவற்றை கண்காட்சியாக காட்சிப்படுத்தியதை தொடங்கி வைத்து பேசியது:
    இரு பள்ளி மாணவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அறிவார்ந்த செயல் திட்டங்களை ஊக்குவித்து அவர்களிடம் பொதிந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருதலே இத்திட்டத்தின் நோக்கமாகும். கண்காட்சியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி , மழைநீர் சேகரிப்பு, மறுசுழற்சி இல்லாத நெகிழி குப்பைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல், நீர் பாசன முறையில் பயிர்களுக்கு ஏற்ற பாசன முறைகள் போன்ற மாதிரி வடிவங்கள் இரு பள்ளி மாணவர்கள் அமைத்திருந்தது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
    விழாவில், முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன், பட்டதாரி ஆசிரியர்கள் பா. ரகு , வி. வடிவேல், வ. இளங்கோவன், எல். பிருந்தாதேவி, தமிழாசிரியை கே. மதுராந்தகி, அறிவியல் ஆசிரியை ஜி. பிரசன்னா, பட்டதாரி ஆசிரியர் சி. ராஜேஷ்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai