Enable Javscript for better performance
மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், கபடி போட்டியில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி முதலிடம் பெற்றது.
    திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. கபடி, தடகளம், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் புலிவலம் ஆண்கள் அணியினரும், பெண்கள் பிரிவில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணியும் முதலிடம் பிடித்தனர்.
    இதேபோல், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர் அகல்யாண், 1,500 மீட்டர் ஓட்டத்தில் திருத்துறைப்பூண்டி ஆண்டனி மெட்ரிக்பள்ளி மாணவர் செல்வபாரதி, பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் திருவாரூர் ஜிஆர்எம் பள்ளி மாணவி ஜனனி ஆகியோர் அவரவர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். முன்னதாக, போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் தொடங்கி வைத்தார். போட்டியில் வென்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai