Enable Javscript for better performance
28-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதிலும், எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் பெறுவதிலும் இடர்பாடுகள் இருந்தால் அதை களைவது குறித்தும், நுகர்வோர்களின் புகார்களைப் பெற்று, உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்துவது தொடர்பாகவும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, எரிவாயு வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.
    மேலும், எரிவாயு விநியோகம் சீராக நடைபெறத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai