Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் நூல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் நூல் வெளியீடு

    By DIN  |   Published on : 31st March 2018 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3-ஆவது நாள் மாநில மாநாட்டில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 -ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் தலைமையில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடும் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 
    விழாவில், பேராசிரியர்  ந. முத்துமோகன் எழுதிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் தேர்வு நூலினை தேசியக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு வெளியிட, அதை தேசியச் செயலர் டி. ராஜா பெற்றுக் கொண்டார். அடுத்து, டி. ராஜா, ந. முத்துமோகன் ஆகியோர் இணைந்து எழுதிய மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் தொடர் உரையாடல் நூலை தேசியச் செயலர் கே. நாராயணன் வெளியிட, அதை கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் பெற்றுக் கொண்டார். 3-ஆவது நூலாக எம்.ஆர். ரகுநாதன் எழுதிய தமிழ்ப் புதினங்களில் பெண்கள், ஆண்கள் சாதிகள் என்ற நூலை, தாமரை இலக்கிய இதழ் ஆசிரியர் சி. மகேந்திரன் வெளியிட, அதை உங்கள் நூலகம் ஆசிரியர் த. ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக்கொண்டார்.
    நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைச் செயலர்கள் கே. சுப்பராயன்,  மு. வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ. பழனிச்சாமி, என். பெரியசாமி, மாநில நிர்வாகக்குழு  உறுப்பினர்கள் எம். செல்வராசு, வை. செல்வராஜ், மாவட்ட ச் செயலர் வை. சிவபுண்ணியம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலர் இரா. காமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai