Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி

    By DIN  |   Published on : 31st March 2018 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்க்காடு பகுதியில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாமகவினர்  மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், சித்தர்க்காடு ஆகிய பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். இதேபோல், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களிலும் பாமக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai