Enable Javscript for better performance
திருநெய்ப்பேர் வன்மீகநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெய்ப்பேர் வன்மீகநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகேயுள்ள திருநெய்ப்பேர் அருள்மிகு உமாமகேஸ்வரி அம்பிகை உடனுறை வன்மீகநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 
    திருவாரூர் அறநெறிப் பெருமானுக்கு நீரால் திருவிளக்கிட்ட நமிநந்தி அடிகள் நாயனார் அவதரித்த திருநெய்ப்பேரில் உள்ள வன்மீகநாத சுவாமி கோயில் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், அதற்கு திருப்பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, பழுதானப் பகுதிகளை செப்பனிட்டு சன்னிதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் புதன்கிழமை, வியாழக்கிழமை முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது. இதையடுத்து, மஹா பூர்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாத்ராதானம், கடங்கள் புறப்பாட்டை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai