Enable Javscript for better performance
தீக்காயமடைந்த தாய், மகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேரளம் அருகே குடும்பத் தகராறில் தீவைத்துக்கொண்ட தாய், மகள் இருவரும் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 
    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே கொத்தவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (30). இவரது மனைவி கோகிலா (25). இவர்களுக்கு சபிதா (3 ) மகள் உள்ளார். கூலித்தொழிலாளியான மாரியப்பனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் நாள்தோறும் தகராறு ஏற்படுமாம்.
    வழக்கம்போல், மார்ச் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதையடுத்து மாரியப்பன் வெளியில் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கோகிலா தன்மீதும், மகள் சபிதா மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கோகிலாவும், சபிதாவும் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 
    இதுகுறித்து கோகிலாவின்  சகோதரர் சிவகுரு பேரளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோகிலாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இவரது சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai