Enable Javscript for better performance
"நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்'- Dinamani

சுடச்சுட

    

    நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றியும், முன்னேற்றமும் நிச்சயமாக கிடைக்கும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் தெரிவித்தார்.
    திருவாரூர் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 16-ஆவது பட்டமளிப்பு விழாவில், 488 இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு பட்டம் வழங்கி மேலும் பேசியது: தற்போதைய உலகில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். 
    ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அனைத்துத் துறைகளிலும் பணியாற்ற தயங்கக்கூடாது. நாம், நம் மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் வெற்றியும், முன்னேற்றமும் கை கூடி வரும் என்றார் அவர். 
    கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரிச் செயலர் எஸ்.எம். மிஸ்கீன் தலைமை வகித்தார். 
    இதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெரோஸ்ஷா, பெஜிலா பெரோஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பட்டம் பெற்ற 488 மாணவியர்களில், பல்கலைக்கழகத் தேர்வில் 5 மாணவிகள் முதலிடமும், பல்கலைக்கழக தரத் தேர்வில் 2 மாணவிகள் முதலிடமும் பெற்றவர்கள் அடங்குவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai