Enable Javscript for better performance
மன்னார்குடியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம், பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம், பேரணி

    By DIN  |   Published on : 31st March 2018 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 -ஆவது மாநாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை (மார்ச் 31) பொதுக்கூட்டம், பேரணி மற்றும் மாநிலச் செயலர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -ஆவது மாநில மாநாடு மன்னார்குடி வ.உ.சி. சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பிரமாண்டமான பந்தல் அமைத்து மார்ச் 28 -ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.
    முதல் நாளான புதன்கிழமை பொது மாநாட்டுடன் தொடங்கிய மாநாட்டில் கட்சியின் தேசியப் பொதுச் செயலர் எஸ். சுதாகர்ரெட்டி, இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
    முதல் நாள் மாலையிலிருந்து நடைபெற்று வரும் மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகள் விவாதக் கூட்டம் சனிக்கிழமை முற்பகலில் நிறைவு பெறுகிறது.
    இதைத்தொடர்ந்து, பிற்பகலில் புதிய மாநில நிர்வாகக் குழு தேர்தல், கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தேர்வு ஆகியவை முடிந்த பின், கட்சியின் புதிய தமிழ்நாடு மாநிலச் செயலர் தேர்வு நடைபெறுகிறது.
    பின்னர், பிற்கபல் 3 மணிக்கு தேரடியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் செம்படை பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து வ.உ.சி. சாலையில் உள்ள பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பேரணி நிறைவுபெறுகிறது.
    பொதுக்கூட்டத்துக்கு, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் வை. சிவபுண்ணியம் தலைமை வகிக்கிறார்.
    கூட்டத்தில், கட்சியின் தேசியப் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர்கள் டி. ராஜா, டாக்டர் கே. நாராயணா, நாகேந்திரநாத் ஓசா, தேசியக் குழு உறுப்பினர்கள் ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், மாநிலச் செயலர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai