Enable Javscript for better performance
ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
    ரயில்வே வசம் 11 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இருப்புப் பாதை, ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர உபரி நிலமாக, ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் உள்ளது.
    இதில், தெற்கு ரயில்வே உபரி நிலம் 6,726 ஏக்கர். 2009-10-ஆம் நிதியாண்டு முதல் நடப்பாண்டு வரை 54 முக்கிய நகரங்களில் உள்ள உபரி நிலங்களில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், வர்த்தகக் கட்டடங்கள் மற்றும் ஏ.டி.எம்.  அமைக்க 467 ஏக்கர் நிலத்தை ரயில் நில வளர்ச்சி ஆணையத்திடம், ரயில்வேத்துறை ஒப்படைத்தது. 
    இதன்மூலம் ரூ.14,000 கோடி நிதித் திரட்டவும் திட்டமிட்டு இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருச்சி, ஈரோடு, சேலம், ராமேசுவரம், விழுப்புரம், நாகை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களின் நிலங்களும் இதில் அடங்கும்.
    இது தவிர, 2,130 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் இருந்தது. இதில் 237 ஏக்கர் நிலம் கடந்த நிதியாண்டுகளில் மீட்கப்பட்டது. அதிகபட்சமாக, வடகிழக்கு எல்லை ரயில்வேயில் 120 ஏக்கரும், தெற்கு ரயில்வேயில் நாலே கால் ஏக்கரும் மீட்கப்பட்டது. இன்னும் ஆக்கிரமிப்பில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,893 ஏக்கர் நிலத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்துகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai