Enable Javscript for better performance
கதண்டுகள் அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே இரு இடங்களில் இருந்த கதண்டுகளைத் தீயணைப்பு நிலைய வீரர்கள் புதன்கிழமை இரவு தீயிட்டு அழித்தனர்.
    கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வ. மாரிமுத்து என்ற விவசாயியின் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள புளியமரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதேபோல், கூத்தாநல்லூர்  கமாலியாத் தெருவில் வசிக்கும் எல்.ஏ. அப்துல்காதர் என்பவரது வீட்டின் தென்னை மரத்தில், கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதுகுறித்து இருவரும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    இதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், முதன்மை தீயணைப்பு அலுவலர்  ஜெகதீசன், முத்து உள்ளிட்டோர் சென்று, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு ஆடைகளை அணிந்துகொண்டு, இருட்டியதும் தீப்பந்தத்தை ஏற்றிக்கொண்டு கதண்டுகளை அழித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai