Enable Javscript for better performance
கைதிகளுக்கு மருத்துவவிழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் துணைச் சிறையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.
    முகாமில், 16 பெண் கைதிகளுக்கு தனித் தனியே பரிசோதனைகள், மருத்துவக் குழுவால் செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கூடுதல் சிகிச்சை தேவைப்படும் கைதிகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
    தொடந்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கைதிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    இந்த முகாமில் மருத்துவர் ரம்யா, வழக்குரைஞர் தாரணி, பாலம்பிகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai