Enable Javscript for better performance
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும்.  நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்காலிக தீர்வாக, நிகழாண்டும் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் மணவழகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலர் கிரண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai