Enable Javscript for better performance
பொதுமக்களுக்கான இடையூறு வழக்கில் திமுகவினர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுகவினரை திருவாரூர் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்தது. 
    தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், அத்தியாவசியப்  பொருள்களான சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு விலைகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து 2017 நவ. 22 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    திருவாரூர் தெற்குவீதியில் உள்ள நியாய விலை கடை முன்பு  நகர திமுக சார்பில் திருவாரூர் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக காவல்துறையினர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, திருவாரூர் குற்றவியல் நீதித்துறை  நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து
    தீர்ப்பளித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai