Enable Javscript for better performance
மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், அதங்குடி, வாழாச்சேரியில் உள்ள மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
    வாழாச்சேரி, மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் கொ. ஹஜ்ரியா தாரின் 1,200-க்கு 1,161 மதிப்பெண்களும், ரா.அ. செய்யது பாத்திமா 1,148 மதிப்பெண்களும், ஹெச். தவ்பீகா ஷிரின் 1,145, அ.ஹ. சமீரா ஜாஸ்மின் 1,140, ந. சுல்பியா ஷிரின் 1,121 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அத்துடன் 1,150 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவர், 1,100 க்கு மேல் 7  பேர், 1,000-க்கும் மேல் 19 பேர் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 41 பேரும் தேர்ச்சி பெற்று, இப்பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளது.
    அனைத்து  மாணவர்களையும் பள்ளியின் தாளாளர் வி.ஆர்.என். பன்னீர்செல்வம், தலைமையாசிரியர் எம். சுப்ரமணியன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
    இதேபோல், கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய 73 மாணவர்களில், 71 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீதத் தேர்ச்சி ஆகும். இதில், மாணவி எஸ். சுகைலா பாத்திமா  1,166 மதிப்பெண்களையும், கணக்குப்பதிவியலில் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், மாணவர் ஏ.ஜெ.எஸ். ரிஷ்மான் 1,127, எல். தஹ்மினா தக்ஷின் 1,084 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் ஜெ.எஸ்.ஏ. அஷ்ரப் அலி, முதல்வர் ஏ. தியாகராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
    மன்ப- உல்- உலா மேல்நிலைப்பள்ளியில் 149 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 144 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீதத் தேர்ச்சி ஆகும். இதில், மாணவர் எஸ். விக்னேஷ் 1,128, ஓ.ஏ. முகம்மது தௌபீக் 1,104,பி.எஸ். முகம்மது ரிஷ்வான் மாலிக் 1,099 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் தி.மு. தமீஜூதீன், தலைமையாசிரியர் தி. உதயகுமார், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.எம். அன்வர்தீன், பள்ளி நிர்வாகத் தலைவர் எல்.எம் .அஷ்ரப் உள்ளிட்டோர் பாராட்டினர்.
    கூத்தாநல்லூர் அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 254 மாணவியர் தேர்வு எழுதினர். இப்பள்ளி 82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், மாணவியர் டி.பீ. பாத்திமா 1,123 மதிப்பெண்களும், ஜெ. சுல்தானா பிர்தௌஸ் 1,103, ஏ. அபிநயா 1,068 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவியரைத் தலைமையாசிரியர் டி.எஸ்.ஆர். கருணாநிதி, உதவித் தலைமையாசிரியர் ஜி. வேலாயுதம், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கரீம்  உள்ளிட்டோர்  பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai