Enable Javscript for better performance
முன்விரோதத்தில் இருவருக்குகத்திக்குத்து- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி இரும்புக் கடையில் பொருள்கள் வாங்கியதில் பாக்கி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் இருவர் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்டனர்.
     மன்னார்குடி உப்புக்காரத் தெருவைச் சேர்ந்த பாண்டியனும், சுந்தரமும் கூட்டாக, திருத்துறைப்பூண்டி சாலையில் இரும்புக் கடை நடத்தி வருகின்றனர்.
     இவர்களது கடையில், நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த கலை என்பவர் ரூ. 1 லட்சத்துக்கு பொருள்கள் வாங்கியதில் ரூ. 8 ஆயிரம் பாக்கி வைத்திருந்தாராம். நீண்ட நாள்களாக பாக்கித் தொகையை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
    இதனால், பாண்டியன் மகன் முத்துராஜ் (38) மற்றும் சுந்தரத்தின் மருமகனான திருச்சியை அடுத்த திருவெறும்பூர் சேவியர் மகன் ஜார்ஜ் (32) ஆகியோர் கலையிடம் தொலைபேசியில் புதன்கிழமை தொடர்புகொண்டு பாக்கித் தொகையை கேட்டபோது, இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், முத்துராஜ், ஜார்ஜ் ஆகியோர் காந்திஜீ சாலையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகம் அருகே வியாழக்கிழமை  நின்றுகொண்டிருந்தபோது, அங்கு தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் வந்த கலை,  பாக்கித் தொகை குறித்து பேசும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கலை தரப்பினர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த முத்துராஜ், ஜார்ஜ் ஆகியோர் சிகிக்கைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai