Enable Javscript for better performance
மே 19 மின் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி, கூத்தாநல்லூரில்...
    மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் சனிக்கிழமை (மே 19) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னார்குடி துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், மன்னார்குடி, சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.


    திருத்துறைப்பூண்டி பகுதியில்...
    திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (மே 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி. அழகேசன். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்துக்குள்பட்ட பள்ளங்கோயில் துணை மின்நிலையத்தில் மே 19-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், திருத்துறைப்பூண்டி நகர், வேளூர், பாண்டி, குன்னலூர், எடையூர் சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆலிவலம், ஆண்டாங்கரை குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்காலடி ஆகிய பகுதிகள் மட்டுமன்றி பெருகவாழ்ந்தான் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai