Enable Javscript for better performance
ரமலான் நோன்பு: கூத்தாநல்லூரைதூய்மைப்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரமலான் நோன்பு: கூத்தாநல்லூரை தூய்மைப்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ரமலான் நோன்பையொட்டி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் எஸ். சிகாபுதீன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: மே 16-ஆம் தேதி புதன்கிழமை முதல் இஸ்லாமியர்களின் நோன்பு தொடங்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தும், கொசு மருந்து தெளித்தும், தெருக்களில் பழுதடைந்த மின்சார விளக்குகளைச் சரிசெய்து தர வேண்டும். மேலும், தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளித்து நகரத்தில் சுகாதாரம் பேண வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai