Enable Javscript for better performance
வங்கிக்கு வந்த கள்ளநோட்டுகள்: போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் உள்ள வங்கிக்கு கள்ளநோட்டு வந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
    திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து அண்மையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில், கள்ளநோட்டு இருந்ததாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவை கள்ளநோட்டுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி சார்பில், திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கள்ளநோட்டுகள் எவ்வாறு வங்கிக்கு வந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai