Enable Javscript for better performance
வேருக்கு நேரடி நீர் பாய்ச்சி பூசணி சாகுபடி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வேருக்கு நேரடி நீர் பாய்ச்சி பூசணி சாகுபடி: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 18th May 2018 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் வட்டம், பள்ளிவாரமங்கலம், கடுகங்குடி ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பில் வேருக்கு நேரடியாக நீர் பாய்ச்சி புதிய முறையில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     திருவாரூர் அருகேயுள்ள பள்ளிவாரமங்கலத்தில் வேருக்கு நீர் பாய்ச்சும் புதிய முறையில் 80 சென்ட் பரப்பளவில் விவசாயி ஒருவர் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளார். இதை, ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பார்வையிட்டு, விவசாயிடம் நீர் பாய்ச்சும் முறை குறித்தும், வேருக்கு நீர் பாய்ச்சும் முறை மூலம் பூசணி சாகுபடி செய்வதன் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, கடுகங்குடி கிராமத்தில் விவசாயி ஒருவர் 2 ஏக்கர் பரப்பளவில் வேருக்கு நீர் பாய்ச்சும் புதிய முறையை பயன்படுத்தி பூசணிகாய் சாகுபடி  செய்யப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டு, சாதாரண முறை மற்றும் புதிய முறையில் பூசணிகாய் சாகுபடி செய்வதன் பயன்கள் குறித்து கேட்டறிந்து, விவசாயிக்கு வேளாண் தொழில்நுட்பங்களை அவ்வ போது எடுத்து கூறுமாறு தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
    இதுகுறித்து ஆட்சியர் கூறியது: தமிழக  கூடுதல் தலைமைச் செயலரும் வருவாய் நிர்வாக ஆணையருமான கொ. சத்தியகோபால் மரப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்காக வேருக்கு நீர் பாய்ச்சும் புதிய முறையை அறிமுகம் செய்தார். அதன்படி, இம்மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்துக்கு 5 விவசாயிகள் வீதம் மொத்தம் 25 ஹெக்டேர் பரப்பளவில் கொடி ரக காய்கறி சாகுபடி (பூசணி, பரங்கிக்காய்) வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை உதவியுடன் செய்து வருகிறார்கள். இப்புதிய முறை மூலம் சாகுபடி செய்யும் கொடி ரக காய்கறி செடியின் வேருக்கு நேரடியாக நீர் செல்வதால்,  குறுகிய காலத்தில் வேரின் வளர்ச்சி அதிகரித்து அதிக மகசூல் பெறலாம் என்றார்.
    ஆய்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சந்துரு, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சுரேஷ், துணை இயக்குநர் கல்யாணசுந்தரம், உதவி தோட்டக்கலை அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai