ஜேசிஐ வார விழா தொடக்கம்

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், ஜேசிஐ வார விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், ஜேசிஐ வார விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
மணிமேகலை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார்.
பசுமைக் கரங்கள் அமைப்பின் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான குவாலிட்டி கைலாசம் தேசியக் கொடியையும், அமைப்பின் முன்னாள் மண்டல தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன் ஜேசிஐ கொடியையும் ஏற்றி வைத்து, வார விழாவை  தொடங்கி வைத்தனர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஆரோக்கியமாக வாழ்வது குறித்த துண்டுப் பிரசுரம் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரையில் உள்ள புனித ஜோசப் சிறார் இல்லத்தில் பல் பரிசோதனை நடைபெற்றது. இதில், பல் மருத்துவர் மோனிகா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பற்பசைகளும் வழங்கப்பட்டன. பின்னர், வடக்கு வீதி விவேகானந்த யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மையத்தின் தலைவி கலைச்செல்வி கலந்துகொண்டு, யோகா பயிற்சி அளித்தார்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமைப்பின் சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டதுடன், 9 வகையான இயற்கை உணவுகள் பரிமாறப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாலையில் பெண்ட்லேண்ட் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கான யோகா பயிற்சியை, யோகா ஆசிரியர் இமானுவேல் அளித்தார். மாணவர்களுக்கு கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொருட்டு சோப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com