18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி மாற்றம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பு வெளி வந்தவுடன் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் அமமுக கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தி. 

சட்டப் பேரவை உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பு வெளி வந்தவுடன் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் அமமுக கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தி. 
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நேரடியாக சண்டை தொடங்கவிட்டது. அந்த சண்டை முற்றி ஓ. பன்னீர்செல்வம் வெளியில் வருவார். அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவியிடம் 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் , ஜெயக்குமார் உள்ளிட்ட 6 அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் எங்களிடம் தான் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்களுக்கான தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த தமிழக முதல்வர் அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் என்பது உறுதி. 
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் முறையாக தூர்வாராததே. மேலும், தூர்வாருவதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தமிழகத்தில் நீர்நிலைகள் முறையாக தூர்வாராததால் விவசாயம் பாதித்து தண்ணீர்  கடலில் கலந்ததை கர்நாடக விவசாயிகள், தலைவர்கள்  விமர்சிக்கும் நிலை  உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அங்கு சென்று ஆறுதல் கூறவில்லை. நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை. ஆனால், முக்கொம்பு அணை உடைந்தபோது முதல்வர் அங்கு வந்ததற்கு காரணம் டெல்டா பகுதி விவசாயிகள் மீது பாசமல்ல பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் பணிகளில் வரும் கமிஷன்தான் காரணம். முறையான கமிஷன் வராததால் முக்கொம்பு அணை பணிகள் தொடங்கவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இதற்கான தீர்மானத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். எனவே, தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com