தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோர் செப். 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோர் செப். 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் கோரி, திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் மற்றும் இணைப்புகளுடன் செப். 28- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
படிவம் ஏ.இ-5 இல் பூர்த்தி செய்த விண்ணப்பம் 6 பிரதிகளும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் 6 பிரதிகளும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க இந்திய வெடிபொருள் சட்டம் 2008-இன் கீழ் பட்டாசு உரிமம் கோரி திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் மற்றும் இணைப்புகளுடன் செப்.28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரூ.600-ஐ திருவாரூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கிளையில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டு, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், சென்ற ஆண்டு தற்காலிக உரிமம் பெற்றிருப்பின் அதன் நகலையும் சேர்த்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com