திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கூத்தாநல்லூர் வட்டம், சாத்தனூரில் திமுக ஒன்றியச் செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கூத்தாநல்லூர் வட்டம், சாத்தனூரில் திமுக ஒன்றியச் செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தனூர் மீனாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் டி.அருண் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஐ.வி.குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி டீ.செல்வம் வரவேற்றார்.
கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி.பாலு, வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியை கட்சியினர் கவனிக்க வேண்டும் என்றும் வரும் இடைத் தேர்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி கே.சுப்ரமணியன், ஒன்றியப் பொருளாளர் டி.ஜெகஜீவன்ராம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வி.சண்முகம், ஒன்றிய துணைச் செயலாளர் கே.ஆர்.சித்தரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com