தேர்தல் புகார்களை நேரில் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 01st April 2019 07:56 AM | Last Updated : 01st April 2019 07:56 AM | அ+அ அ- |

நாகை மக்களவைத் தொகுதி செலவினப் புகார்கள் குறித்து நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று செலவினப் பார்வையாளர் தினேஷ் பருச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாகை சட்டப் பேரவைத் தொகுதி, கீழ்வேளூர் சட்டப் பேரவை தொகுதி, வேதாரண்யம் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
நாகை வட்டம், பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளேன். நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்கான செலவினங்கள் தொடர்பான புகார்கள், ஆலோசனைகள் ஏதுமிருப்பின், விருந்தினர் மாளிகையில் காலை 9 முதல் 10 மணி வரை அலுவலக வேலை நாள்களில் நேரிடையாக அல்லது கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 6381991163 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.