தர்மபுரிக்கு 945 டன் நெல் அனுப்பி வைப்பு
By DIN | Published On : 04th April 2019 07:15 AM | Last Updated : 04th April 2019 07:15 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 945 டன் சன்னரக நெல் அரவைக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையர்நத்தம் திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட 945 டன் சன்னரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சரக்கு ரயில் மூலம் தர்மபுரிக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.