பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச் சாவடி மையம்

நன்னிலம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாதிரி வாக்குச் சாவடி மையம் அண்மையில் திறக்கப்பட்டது.  

நன்னிலம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாதிரி வாக்குச் சாவடி மையம் அண்மையில் திறக்கப்பட்டது.  
நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நன்னிலம், குடவாசல், வலங்கைமான் போன்ற பகுதிகளில் 100 சதவீத நேர்மையான வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  நன்னிலம் பேரூராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில், பேருந்து நிலையத்தில் அண்மையில் மாதிரி வாக்குச் சாவடி மையத்தை நன்னிலம் வட்டாட்சியர் கோ. ஜானகி திறந்து வைத்தார். இந்த மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் மாதிரி வாக்குச் சாவடி மையம் சென்று எவ்வாறு வாக்களிப்பது என்று ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். மேலும், விளக்கம் கேட்கும் பொதுமக்களுக்கு செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கிராமப்பகுதி மக்கள் வாக்களிப்பது எவ்வாறு என்று அறிந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com