சுடச்சுட

  

  மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்காக...
  மதச்சார்பற்ற கூட்டணி நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோருக்கு கூத்தாநல்லூர் பதிதயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
   லெட்சுமாங்குடி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம். சுதர்ஸன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பஜீலுல்ஹக், அத்திக்கடை கிளைத் தலைவர் ரிஸ்வான், கூத்தாநல்லூர் நகரத் தலைவர் நூருல் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்று, எம். செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், பூண்டி கே. கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்குகள் சேகரித்தனர்.

  ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளருக்காக...
  நன்னிலம் ஒன்றியம், ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 
  திமுக ஊராட்சி குழு உறுப்பினர் குமர. பழனிவேல், கிளைச் செயலாளர் கண்ணதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், விடுதலைச் சிறுத்தை கட்சித் தொண்டரணி அமைப்பாளர் நேரு நகர் ராஜா, கிளைச் செயலாளர் செந்தில், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்று, கதிர் அரிவாள் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai