சுடச்சுட

  

  திருவாரூர் அருகே பூட்டி சீல் வைக்கப்பட்ட கோயிலை வழிபாட்டுக்காக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக, அகில பாரத இந்து மகா சபாவின் மாநில துணைத் தலைவர் வி.வேலன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
   திருவாரூர் அருகே வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோயிலில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 13-ஆம் தேதி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு நடைபெறவில்லை. 
   எனவே, மக்களின் வழிபாட்டுக்காக உடனடியாக கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai