சுடச்சுட

  

  திருவாரூரில் இன்று பிரசாரத்தை நிறைவு செய்கிறார் ஸ்டாலின்

  By DIN  |   Published on : 16th April 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
   17-ஆவது மக்களவைத் தேர்தலானது, ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்துடன், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 20-ஆம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதேபோல் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை திருவாரூரில் முடிக்கிறார்.
   முன்னதாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் காலை 8.30-க்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் 9 மணிக்கு குடவாசல், 9.30 மணிக்கு கொரடாச்சேரி, 10.30 மணிக்கு கூத்தாநல்லூர், 11 மணிக்கு கோட்டூர், 11.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் செய்கிறார். பின்னர் 12 மணிக்கு நீர்முளை, 1 மணிக்கு நாகப்பட்டினம், 1.30 மணிக்கு கீழ்வேளூர் என பிரசாரம் மேற்கொள்ளும் அவர் இறுதியாக திருவாரூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai