சுடச்சுட

  

  "துரோணாச்சார்யா விருதுக்கு 25- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்'

  By DIN  |   Published on : 16th April 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  துரோணாச்சார்யா விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருதுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  விளையாட்டுத் துறையில் நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n- இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா சென்னை 600084 என்ற முகவரிக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 04366-227158 மற்றும் 044-28364322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai