சுடச்சுட

  

  திருவாரூரில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
   திருவாரூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
  தேர்தல் பணிக்காக, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திலிருந்து வருகை தந்துள்ள எல்லைப் பாதுகாப்பு படையினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். சட்டம் ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீஸார், துணை ராணுவத்தினர் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். 
  திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆகியோர், இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். 
  அணி வகுப்பானது, திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai