சுடச்சுட

  

  நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோயில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலில் 34-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றுவருகின்றன. இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
  இதையொட்டி, சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் புஷ்பப் பல்லக்கில் மகாமாரியம்மன் எழுந்தருளி திருவீதியுலாவுக்குப் புறப்பாடானார். நிகழ்ச்சியில் என்.டி.எம்.எஸ். காமாட்சி சுந்தரம் குழுவினரின் நாகசுர இன்னிசை  நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்த புஷ்பப் பல்லக்கு திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
  இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டி. அரவிந்தன், செயல் அலுவலர் ரெ. அய்யப்பன் மற்றும் தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர். இவ்விழா புதன்கிழமையுடன் (ஏப். 17) நிறைவடைகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai