சுடச்சுட

  

  மக்கள் சந்திக்கும் இடமாக எம்எல்ஏ அலுவலகம் மாற்றப்படும்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

  By DIN  |   Published on : 16th April 2019 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் சட்டப்பேரவை அலுவலகம் மக்கள் சந்திக்கும் இடமாக மாற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம் தெரிவித்தார்.
  திருவாரூர் சட்டப் பேரவைக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம், திருவாரூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
  அப்போது, அவர் தெரிவித்தது:
  தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களை சந்திக்கிறபோது, கடந்த 8 ஆண்டுகளாக திருவாரூர் சட்டப் பேரவை அலுவலகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. அவசர உதவிக்கு சட்டப் பேரவை உறுப்பினரின் முகவர்களைக்கூட அணுக முடியவில்லை, தமிழக அரசால் வழங்கப்பட்ட தொகுதி நிதியிலும் குறிப்பிடத் தகுந்த பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று கூறி ஆதங்கப்பட்டனர். 
  எனவே, நான் வெற்றிபெற்றபின், சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அனைத்து நாள்களிலும் திறந்து வைத்து, மக்கள் தங்களது உதவிக்கு சந்திக்கும் இடமாக மாற்றப்படும். இதுபோல் தொகுதி நிதியும் மக்களின் கருத்துக்களை கேட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். வாரத்தில் ஒருநாள் தொகுதியில் ஏதாவது ஒர் இடத்தில் சுழற்சி முறையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்படும். திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு, கூடுதல் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மடப்புரம், மருதம்பட்டினம் ஆகிய இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவைகளை நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai