சுடச்சுட

  


  திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. 
  திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்குத் தொடுத்தவர்களுக்கு வழக்கை சமரசமாக தீர்வு காணுவதன் அவசியம், அதனால் ஏற்படும் தேவையற்ற கால விரயம், பொருள் விரயம் மற்றும் மனஉளைச்சலில் இருந்து விடுபடுவது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதிபதி கவிதா, வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சதீஸ்குமார்,  செயலர் குமண வள்ளல், மூத்த வழக்குரைஞர்கள் கோ. தருமராஜன், டி. ஆனந்தன் உள்ளிட்டோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிக் குழுத் தன்னார்வலர் கருணாநிதி செய்திருந்தார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai