சுடச்சுட

  


  தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனை ஆதரித்து, மன்னார்குடியில் கூட்டணிக் கட்சியினர் இறுதிக்கட்டப் பிரசாரமாக இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று  செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
  தேரடி காந்திசிலை அருகே ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வானத்தில் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் நிறைவு செய்தனர். 
  இதில், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எம்.கே. கலியபெருமாள், தமாகா சார்பில் நகர் மன்ற முன்னாள் தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், நகரத் தலைவர் கே.எஸ். நடனபதி, பாமக மாவட்ட அவைத் தலைவர் சீனி. தனபாலன், பாஜக மாவட்ட பொதுச் செயலர் வி.கே.செல்வம், நகரத் தலைவர் பால. பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாக்கிகள்
  கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai