சுடச்சுட

  


  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வலங்கைமான் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் மதுப் புட்டிகள், சாராயம் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
  வலங்கைமான் பகுதியில் குடவாசல் சாலையில் உள்ள தேநீர் கடையில் மக்களவைத் தேர்தலின்போது, கட்சியினருக்கு வழங்குவதற்காக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கடையில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 
  இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வலங்கைமானைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவரை கைது செய்தனர்.
  மது புட்டிகள், சரக்கு வாகனம் பறிமுதல்: வலங்கைமான் வெட்டாறு கீழ அமராவதி பகுதியில் திங்கள்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, சோதனையிட்டபோது, அதில் 552 மது புட்டிகள் இருந்தன. இவற்றை சரக்கு வாகனத்துடன் போலீஸார் பறிமுதல்
  செய்தனர்.
  மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (42) என்பவரை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai