சுடச்சுட

  

  வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பி உரசியதால் தீக்கிரை

  By DIN  |   Published on : 17th April 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மன்னார்குடி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற மினி லாரி மின்கம்பி உரசியதில் தீக்கிரையானது.
  மன்னார்குடியை அடுத்துள்ள விக்கிரபாண்டியத்திலிருந்து சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. ஆத்தூர், கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எம். அர்ச்சுணன் (24) என்பவர் மினி லாரியை ஓட்டிச்சென்றார். 
  இந்த லாரி புறப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப்பற்றியது. இதையறிந்த லாரி ஓட்டுநர் அருகே இருந்த குளத்து தண்ணீருக்குள் லாரியை ஓட்டிச் செல்ல முயன்றார். இருப்பினும், தீ வேகமாகப் பரவி, லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். 
  இந்த விபத்து குறித்து, விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai