சுடச்சுட

  


  குடவாசல் ஒன்றியம், மணவாளநல்லூர் பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.
  எரவாஞ்சேரியில் கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைவாக இருந்ததால் இப்பகுதி மக்களிடையே 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி  கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வழங்கினர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இப்பிரசாரம்  மேற்கொள்ளப்பட்டது. இயக்கத்தின் களப்பகுதி  ஒருங்கிணைப்பாளர்கள் பிரமீளா, அனுசுயா, உமா முதலியோர் வாக்காளர் விழிப்புணர்வு துணிப்பைகளை வழங்க, எரவாஞ்சேரி லயன்ஸ் சங்க சாசன செயலாளர் ப.துரை, ஆ. தமிழ்செல்வன் மற்றும் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai