அசோக சக்ரா விருது: ஏப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
By DIN | Published On : 21st April 2019 01:00 AM | Last Updated : 21st April 2019 01:00 AM | அ+அ அ- |

அசோக சக்ரா விருது பெற ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியப் படைத்துறையினரால் போர்க்காலம் அல்லது அமைதி காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற உயிர்த் தியாகத்துக்காகவும் வழங்கப்படும் அசோக சக்ரா விருது, போர்க்காலம் இல்லாத நேரங்களில் செய்யப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்துக்காகவும், வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது, இந்திய படை வீரர்களின் விருந்தோம்பல், துணிகர நடவடிக்கை மற்றும் சுய தியாகத்துக்காக ஷெளரிய சக்ரா விருது, ஆகியவைகளைப் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
படைத்துறையினர், குடிமக்கள், இயற்கை இடர்பாடுகளின்போது துணிகர செயல்களில் ஈடுபட்ட நபர்கள், விபத்துகளிலிருந்து காப்பாற்றியவர்கள், நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றியவர்கள், தீ விபத்துகளின்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மனித உயிரைக் காப்பாற்றியவர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து மீட்டவர்கள், திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களிடமிருந்து துணிகர நடவடிக்கை மேற்கொண்டு காப்பாற்றியவர்கள் உள்ளிட்ட வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், விளையாட்டரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் என்ற முகவரிக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களைப் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158-இல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.